கோயம்பத்தூர்

கோவையில் உணவுத் துறையின் மெகா கண்காட்சி!

Published

on

கோவையில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஆறு முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வு, தென்னிந்தியாவில் உள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு, உணவு பதப்படுத்துதல், பேக்கரி, உணவு உற்பத்தி இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உருவாகி வரும் நவீன தொழில்நுட்பங்களையும் புதுமைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் கூறும்போது :

“இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், இந்திய மசாலா வாரியம், தேசிய மஞ்சள் வாரியம் மற்றும் பல்வேறு முன்னணி தொழில்துறை அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும்

இந்தக் கண்காட்சியில், 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் தொழில்துறை நிகழ்வில், உணவு பதப்படுத்துதல், பானங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பேக்கரி மற்றும் இனிப்பு தயாரிப்புகள், உணவு பேக்கேஜிங், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறை, வேளாண் தொழில் மற்றும் உணவு ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல் துறையினர், தொழில்முனைவோர், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர்.

ஆறு கண்காட்சி அரங்குகளில் நடைபெறும் இந்த நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்புகளும் நடைபெற உள்ளன.

Click to comment

Trending

Exit mobile version