ஐடிசி லிமிடெட் நிறுவனம் நடத்தி வரும் WOW – சாம்பியன்ஷிப் 2025 விருது வழங்கும் விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலத்திலேயே குப்பை பிரித்தல், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த முயற்சி மத்திய அரசின் சுவச்ச் பாரத் மிஷன் திட்டத்துடன் இணைந்ததாகும்.கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட சுமார் 250 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் மூலம் காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்ட 215 மெட்ரிக் டன் உலர் மறுசுழற்சி கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் சுமார் 4,000 மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன என்று ஐடிசி லிமிடெட் போர்ட்ஸ் & ஸ்பேசில்ட்டி பேப்பர் டிவிசன் WOW பிரிவின் துணை பொது மேலாளர் எஸ்.என். உமகாந்த் தெரிவித்தார்.
இந்த விழாவில் சங்கெட் பல்வந்த் வகே ஐஏஎஸ் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கினார்.இந்தப் போட்டியில் காளப்பட்டி அமிர்தா வித்யாலயா பள்ளி 9.3 டன் உலர் மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து சிறந்த செயல்திறன் காட்டி 2026’க்கான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.