செய்திகள்

கோவையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி

Published

on

ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பை பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெம் மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணிக்கு முதல் ஓட்டமாக தொடங்குகிறது. இது தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரம் பெற்றது மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான டி சர்ட் வெளியிடு மற்றும் லோகோ அறிமுக நிகழ்ச்சி இன்று கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதனை கோவை மாநகர ஆணையாளர் திரு. N. கண்ணன் வெளியிட்டார்.

ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர்.சி. பழனிவேலு மற்றும் மருத்துவமனை செயல் அதிகாரி டாக்டர். P.பிரவீன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் . அவர்களால் நிறுவப்பட்ட ஜெம் அறக்கட்டளை, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ முகாம்கள், ஏழை எளிய மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றின் மூலம் சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது. ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அமைப்பின் மூலம் 100 நோயாளிகளுக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைகள் ஜெம் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டது.

மகளிருக்கான மாரத்தான் போட்டி ஜெம் மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 22 தேதி காலை 5.30 மணிக்கு தொடங்கி அதே இடத்தில் முடிவடையும். 3கி.மீ, 5கி,மீ, மற்றும் 10 கிமீ மற்றும் 21 கிமீ என நான்கு பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்விற்கு 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். இது மிகப்பெரிய பங்கேற்புகளில் ஒன்றாகும். 10000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலியகுளம், கார்மல் கார்டன் நிர்மலா கல்லூரி வழியாக 3 கி.மீ,. ரேஸ்கோர்ஸ் வழியாக 5 கி.மீ. திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம் 10 கி.மீ., வழித்தடமாக உள்ளது. ஓட்டப்பந்தய வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை மற்றும் அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஜெம் அறக்கட்டளையானது பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுய மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு என எந்த நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெண்கள் நடமாட ஒரு பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

மாரத்தான் போட்டியானது காலை 5.30 மணிக்குத் தொடங்கும் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் ஊடக நண்பர்கள் அனைவரும் நிகழ்வின் தொடக்க நேரத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக ஜெம் மருத்துவமனை வளாகத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் மாரத்தான் பற்றிய விபரங்கள் அறிய : 8925847519

www.coimbatorewomensmarathon.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.

Click to comment

Trending

Exit mobile version