தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்கிற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் கடந்த 14ஆம் தேதி மீனாட்சி மஹால், மகாலிங்கபுரம் ரவுண்டானா, பொள்ளாச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி கே எஸ் சபரி கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில் வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பொள்ளாச்சி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.