அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா கடந்த 5ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ஜெ.நளினி தலைமையுரையாற்றி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி செயலாளர் டாக்டர் .கௌரி கிருஷ்ணன் அவர்கள் சேதியக்கொடியை ஏற்றி சிறப்புச்செய்தார் . காவல் ஆய்வாளர், இரயில்வே வட்டம் ஸ்.மீனாட்சி ஒலிம்பிக் சுடரை ஏற்றி விழாவினை துவக்கி வைத்து மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 600 மீட்டர் ஓட்டத்தில் s .ஹரிப்பிரியா முதலிடத்தை தட்டிச் சென்றார். v தஸ்னிம் இரண்டாவது இடமும், V. நந்தினி மூண்டாவது இடமும் பெற்றனர். இதில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிகளை வழங்கி சிறப்புச் செய்தனர். மாநில அளவில் முதலிடம் பிடித்த 12ஆம் வகுப்பு மாணவியான தேவிகா மற்றும் பூர்ணகலா ஆகியோரை பாராட்டி சிறந்த தடகள வீராங்கனை என்ற பரிசினை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் மற்றோரு நிகழ்வாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஆர்.வேல்மதி ஆண்டு அறிக்கையினை வாசித்தார் ப.வீரமாதேவி நன்றியுடையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது .இதில் விழாவில் சுமார் 1430 மாணவிகள் பங்கு பெற்றனர் .