தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், திமுக சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு 2,047 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர், 3 சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார் , பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஏழை, எளிய மக்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார். தற்போது 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள் தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டுவருகிறது . கோவை மாநகராட்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,650 கோடி கொண்டு வரப்பட்டுள்ளது இதுதவிர 7 பேரூராட்சிகளுக்கும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது . மேலும் கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பில் செமொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.