எம்எஸ்டி ரெட் டிராகன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி சீசன் 5.
கோவை பேரூர் அருகே கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.
சுமார் 32 அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் ரேஞ்சர்ஸ் 11 மற்றும் போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரேஞ்சர்ஸ் 11 அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பின்னர் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ரேஞ்சர்ஸ் 11 அணி 8 ஓவர் முடிவில் 48 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடிய பப்பு பிரசாத் “ஆட்டநாயகன்” விருதைப் பெற்றார்.
“தொடர்நாயகன்” விருதை ஆர்டிஎக்ஸ் அணி வீரர் விஜய்க்கு வழங்கப்பட்டது.
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிக்கு முதல் பரிசாக 20,000 ரூபாயும் 6 அடி கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிக்கு 15,000 ரூபாயும் 5 அடி கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை எம்ஆர்சிசி அணிக்கு 8,000 ரூபாய் பரிசுத் தொகையும் 4 அடி கோப்பையும், நான்காவது இடத்தை ஆர்ஜே பிரோதெரஸ் அணிக்கு 5,000 ரூபாய் பரிசுத் தொகையும் 3 அடி கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிமுக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் அவர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். கவுண்டனூர் வி. பிரசாத், ஜி.பி. பாபு, ரோட்டரி எஸ். மணிகண்டன், ஏ.சி. சிவகுமார், நந்தகுமார், சசிகுமார், பிரவின், பேரூர் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கிரிக்கெட் தொடரை எம்எஸ்டி ரெட் டிராகன் அணி சார்பாகா வி. பிரசாத், எம்எஸ்டி முத்துக்குமார் மற்றும் குழுவினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவிய ஸ்பான்சர்கள் வைஷன் சாரிடபிள் டிரஸ்ட், பிர்லா ஓபன் மைண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் ,ஓகே ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ், நைனா கடை ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.