கோயபுத்தூரில் பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனமான ஸ்போர்ட் லேண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “3வது ஜூனியர் Inter School Athletic Hunt Championship 2025’க்காண Athlete போட்டிகளை “Athlete Hunt” என்ற பெயரில் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமை கோவை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மண்டமாக நடைபெறுகிறது.இந்த போட்டி கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் (Coimbatore District Athletics Association) அங்கீகாரத்துடன் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் 8 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் ஆண் மற்றும் பெண் பிரிவுகளாகப் பங்கேற்கலாம். ஒவ்வொரு வயது பிரிவுக்கும் 50 மீ, 100 மீ, 400 மீ, ஹர்டில்ஸ், லாங் ஜம்ப், ஷாட் புட், ஜாவலின் த்ரோ, டிஸ்கஸ் த்ரோ போன்ற பல்வேறு தடகள நிகழ்ச்சிகள் நடைபெறும்.சிறந்த தடகள வீரருக்கான விருது, மொத்த சாம்பியன்ஷிப் (முதல் நான்கு அணிகளுக்கு), அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட உள்ளன.
பிரிவுகள் மற்றும் போட்டிகள்:
இதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றனர்.U8 – ஆண் & பெண் மாணவர்கள் – 50 மீட்டர் ஓட்ட பந்தயம் , ஸ்டாண்டிங் லாங் ஜம்ப், த்ரோபால் U10 – ஆண் & பெண் மாணவர்கள் ( 09-11-2015 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்) 75 மீ, 200 மீ, ஸ்டாண்டிங் லாங் ஜம்ப், த்ரோபால் , 4×75மீ ஷட்டில் ரிலே U12 – ஆண் & பெண் மாணவர்கள் (09-11-2013 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்)
60மீ ஹர்டில்ஸ், 100மீ, 400மீ, 5மீ லாங் ஜம்ப், ஷாட் புட், கிட்ஸ் ஜாவலின் த்ரோ, 4×75மீ ஷட்டில் ரிலே, U14 – ஆண் & பெண் மாணவர்கள் (09-11-2011 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்) 80மீ ஹர்டில்ஸ், 100மீ, 400மீ, 600மீ, ஹை ஜம்ப், 10மீ லாங் ஜம்ப், ஷாட் புட், கிட்ஸ் ஜாவலின் த்ரோ, 4×100மீ ரிலே, U16 – ஆண் & பெண் மாணவர்கள் (09-11-2009 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்) 80மீ ஹர்டில்ஸ், 100மீ, 300மீ, 600மீ, 1000மீ, ஹை ஜம்ப், லாங் ஜம்ப், ஷாட் புட், ஜாவலின் த்ரோ, டிஸ்கஸ் த்ரோ, 4×100மீ ரிலே, U18 – ஆண் & பெண் மாணவர்கள் (09-11-2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்) 100/110மீ ஹர்டில்ஸ், 100மீ, 400மீ, 800மீ, 1500மீ, ஹை ஜம்ப், லாங் ஜம்ப், ஷாட் புட், ஜாவலின் த்ரோ, டிஸ்கஸ் த்ரோ, 4×100மீ ரிலே, மற்றும் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான மிக்ஸ்டு ரிலே (4×200மீ மிக்ஸ்டு ரிலே) போட்டிகள் நடைபெற இருக்கின்றனர் .
நுழைவு கட்டணம்:
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ரூ.100 நுழைவு கட்டணமாக செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு நுழைவு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு: 8072621683 /
88077 63223