கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் உள்ள எமரால்டு ஜூவல் தங்க நகை உறுப்பத்தி நிறுவனமான ஜூவல் ஒன் மற்றும் கிரிசா அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக போதைப் பொருள் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது . இதில் ஜூவல் ஒன் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட சுமார் 2,300 பேர் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்.
தொப்பம்பட்டி எமரால்டு மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை எமரால்டு நிறுவனர் சீனிவாசன், கே ஜி மருத்துவமனை தலைவர் கே ஜி பக்தவச்சலம், கொடியசைத்து இந்தப் போட்டியினை துவங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஒட்டமானது தொப்பம்பட்டி எமரால்டு மைதானத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் வரை சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு பதகங்களும் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டனர்.
வெற்றிப் பெற்றவர்களுக்கு கோவை மாவட்ட எஸ். பி கார்த்திகேயன் IPS அவர்கள்தனது திருக்கரங்களால் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த மாரத்தான் “ஒன் ரன் ஒன் சேஞ்ச்” போதை விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.