உள்ளூர் செய்திகள்

தனது 21வது கிளையை நிறுவிய அன்னபூர்ணா !

Published

on

கோவையில் பிரபல ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் தனது 21வது கிளையை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் கடந்த திங்கட்கிழமை திறந்துள்ளது. குமரன் ஆயில் மில்லை சேர்ந்த பொன்னுசாமி புதிய கிளையைத் திறந்து சிறப்புச் செய்தார் .

இந்த நிகழ்வில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் தாமோதரசாமி, எக்சிகியூடிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்தக் கிளை 12,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பிரத்யேக டைனிங் ஹால், ஒரு பார்ட்டி ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அடங்கும் .

Click to comment

Trending

Exit mobile version