கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டலியர்ஸ் அசோசியேஷன் (CDHA) சார்பில்,
அமுதசெம்மல் டாக்டர் கே. தாமோதரசாமி நாயுடு (4.10.1926 – 21.11.2006) அவர்களின் நூற்றாண்டு ஆண்டுத் தொடக்க விழா 2025 அக்டோபர் 4 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் மெர்லிஸில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் விருந்தோம்பல் துறையில் பெருமைக்குரிய தலைவராக விளங்கிய டாக்டர் தாமோதரசாமி நாயுடு அவர்கள், புகழ்பெற்ற ஸ்ரீ அன்னபூர்ணா உணவக சங்கத்தின் நிறுவனரும் ஆவார். ஹோட்டல் துறையில் அவர் செய்த பங்களிப்புகள் அளவற்றவை. பல தொழில்முனைவோருக்கு அவர் வழிகாட்டியாகவும், ஊக்கமூட்டியாகவும் இருந்து, தொழிலை ஆரம்பிப்பது, நடத்துவது, வளர்ப்பது குறித்து வழிகாட்டினார். அவர் தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் தலைவராக பணியாற்றியதுடன், “தமிழ்நாட்டின் உணவகத் துறையின் தந்தை” எனப் போற்றப்படுகிறார். அவரது பிறந்தநாள் (அக்டோபர் 4) தமிழ்நாட்டில் உணவகத் தொழிலாளர்களின் தினமாக (Restaurateur’s Day) கொண்டாடப்படுகிறது. கோயம்புத்தூரை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் உணவுக் கலையுலகில் பிரபலமாக்கியதில் அவர் ஆற்றிய பங்கு மிகச் சிறந்ததாகும்.
இவ்விழாவில், ஹோட்டல் மற்றும் தொழில் துறைகளில் சிறப்பாக விளங்கும் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீனிவாசன், ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் வெங்கடேஷ், சிஇஓ ஜெகன் தாமோதரசாமி, மற்றும் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் விவேக் ஸ்ரீனிவாசன் ஆகியோர் விருந்தினர்களை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி சிவகுரு பிரபாகரன் (IAS) ,பிரிகால் நிறுவனர்விஜய் மோகன் , பண்ணாரி அம்மன் குழுமம் தலைவர் பாலசுப்ரமணியம், கே.எம்.சி.எச் தலைவர் டாக்டர் பழனிசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக கிருஷ்ணன் ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் நந்தினி, அத்வைத் லக்ஷ்மி இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் ரவி சாம் ,பிரிகால் நிர்வாக இயக்குநர் வணிதா மோகன் ,கே.எம்.சி.எச் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் என். பழனிசாமி, ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புச்செய்தனர்
தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் தலைவர் எம். வெங்கடசுப்பு அவர்கள் தலைமை வகித்தார். கே.ஏ. ராமசாமி, தலைவர், CDHA வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆர். ஸ்ரீனிவாசன், செயலாளர், தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் தொடக்க உரை நிகழ்த்தினார். விழாவின் சிறப்புக் கணம் — டாக்டர் தாமோதரசாமி நாயுடு அவர்களின் சிலையை வரதராஜன், நிறுவனர் & தலைவர், A.V. Group of Companies திறந்து வைத்தார் மற்றும் சிறப்புரையாற்றினார்.