அன்னூர், அக்.2: அன்னூர் அமரர். முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் நடைபெற்று வருகிறது. அன்னூர் அடுத்துள்ள நாகம்மாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 26ம் தேதி முகாம் துவங்கி இன்று 2ம் தேதி வரை நடைபெருகிறது. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் முகாம்மிட்டு வருகின்றனர். டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்தி துவக்கி வைத்தார். ஒரு வாரம் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பஞ்சாலை நிறுவனத்தை பார்வையிடுதல், அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் வளாக தூய்மை பணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நெகிழிப்பை ஒழிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், அன்னூர் காவல் நிலையம் பார்வையிடுதல், பேரூராட்சி அலுவலகம் பார்வையிடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது கோவை அரவிந்த் கண் மருத்துவமனையும் அன்னூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இந்த கன்சிகிச்சை முகாமில் 170 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் இதில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னூர் தீயணைப்பு நிலையம் பார்வையிடுதல் மற்றும் முகாம் நிறைவு விழா நடத்தப்படுகிறது. முகாம் ஏற்பாடுகளை முகாம் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் செய்துவருகிறார். அவருடன் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வன், ஜோஸ்வாசிங்கம், சுமதி, உமா, தமிழரசி, ஆகியோர் உடன் இருந்து முகாம் பணிகளை செய்து வருகின்றனர்.
அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்டம் முகாமில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள்.
அன்னூரில் உள்ள பஞ்சாலை நிறுவனத்தை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.