சென்னை, துரைப்பாக்கத்தில் “டிஎன்ஏ வீடு” என்ற பெயரில் புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஹேக்கர் ஹவுஸ் துவங்கப்பட்டுள்ளது. இது நிறுவனர்கள், படைப்பாளிகள் மற்றும் லட்சிய நோக்கமுடைய நபர்களுக்கான மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது புதுமை மற்றும் தொழில்முனைவோர் சமூகத்தை வளர்க்கும் நோக்கில் இந்த இடம் செயல்படுகிறது. இந்த ஹேக்கர் ஹவுஸில் மைக்ரோ-சாஸ் குறித்த கலந்துரையாடல்கள், ஸ்லீப் ஓவர்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், “ஹவுஸ்வார்மிங் மாதங்கள்” என்ற தலைப்பில் நெட்வொர்க்கிங் மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.