விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் வண்டியின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததுள்ளது சென்னை மாநகரக் காவல்துறை.
வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராதம் மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் முறையும் விதிக்கப்படுகிறது.
அதன் அபராதத்தொகையே இணையத்தளம் மூலம் கட்டும் வசதி இருந்தாலும் அதை செலுத்த பலரும் தவறுவதால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை சுமார் ரூ.300 கோடி வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை புதிய நடைமுறை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்டு அபராத தொகையை செலுத்தாத வாகனங்களுக்கு, இனி இன்சூரன்ஸ் கட்டணத்துடன் அபாரதத் தொகையையும் செலுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.