நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர், தனது தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புக் குழு (Career Guidance and Placement Cell) மூலம் மனிதவள கருத்தரங்கு (HR Conclave – 2025) நிகழ்வை செப்டம்பர் 12-ம் தேதி சிறப்பாக நடத்தியது. கல்வி மற்றும் தொழில் உலகை இணைக்கும் வகையில் இந்த கருத்தரங்கு பல முன்னணி நிறுவனங்களின் மனிதவள (HR) தலைவர்களையும் தொழில் நிபுணர்களையும் ஒருங்கிணைத்தது.
தி௫. ஷாஜி தாமஸ், மேலாண்மை இயக்குநர் – குளோபல் லீட் பிசினஸ் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஸ்டேட் ஸ்ட்ரீட் முக்கிய உரையாற்றி, மனிதவள மேலாண்மையில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் மாணவிகள் உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்குத் தயாராக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
கல்லூரியிலிருந்து நிறுவனம் (“Campus to Corporate”) மற்றும் வெற்றிகரமான சுயவிவரம் உருவாக்குதல் (“Crafting Winning Resume”) என்ற தலைப்புகளில் இரண்டு விவாதக் குழு உரையாடல்கள் நடைபெற்றன. டெலாய்ட், காக்னிசன்ட், விப்ரோ, தி சென்னை மொபைல்ஸ், சிம்டா குழுமம், மற்றும் ஓம்னிகோம் குரூப் போன்ற முன்னணி நிறுவனங்களின் மனித வள நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மாணவிகள் தொழில் உலகின் எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் சுயவிவர மேம்பாட்டிற்கான நடைமுறை அறிவை பெற்றதோடு, எதிர்கால பணியாளர் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் உறுதியையும் பெற்றனர். கேள்வி-பதில் அமர்வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கல்லூரி செயலர் அ௫ட்சகோதரி டாக்டர். குழந்தை தெரஸ் அவர்கள், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்க உரையால் சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் அ௫ட்சகோதரி. டாக்டர். மேரி ஃபேபியோலா அவர்கள், வாழ்த்துரையாற்றி, நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த குழுவினரின் முயற்சியை பாராட்டினார். பிளேஸ்மென்ட் ஆபிசர் டாக்டர் நித்யா, நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, மாணவிகளையும் தொழில் நிபுணர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டார்