ஆதித்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா:-
சமீபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுகுமாரன், செயலாளர் பிரவீன் குமார், அறங்காவலர்-தலைவர் மற்றும் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, இயக்குநர் ஜோசப் வி. தனிக்கல், டீன் ஐ.ராஜேந்திரன் மற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த CHRO தலைமை அதிகாரி மற்றும் மென்பொருள் பொறியாளர் சசிகாந்த் ஜெயராமன் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம், இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தில் கணினியின் பங்கு மற்றும் அவரது தொழில்முறை பயணத்திலிருந்து பெற்ற பாடங்களை எடுத்துரைக்கும் ஒரு ஊக்கமளிக்கும் முக்கிய உரையை நிகழ்த்தினார்.