தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து ரஹானே 48 ரன்களும் ரசூல் -38 ரன்களும் எடுத்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அஹமது 4 விக்கெட் எடுத்தார் .
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 60/5 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ப்ரேவிஸ் 52 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் . தொடர் முழுவதும் தனது சொதப்பலான ஆட்டத்தினால் ரசிகர்களை வெறுப்பேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய வெற்றி ஆறுதலாக இருந்துள்ளது .
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதுபோல் கண்டிப்பாக உணரும். பவர் பிளேயிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ன் ஐந்து விக்கெட்டுகள் இழக்கச் செய்திருந்தாலும், நடு ஓவர்களில்சரியான திட்டம் இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. இப்போது, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, அவர்கள் பிற போட்டிகளில் விளைவுகளை நம்ப வேண்டியுள்ளது. அதேசமயம், மீதி உள்ள போட்டிகளில் வென்றே ஆகவேண்டிய நிலைக்கு மாறியுள்ளனர்.