ஐபிஎள் 2025இன் 33 வது போட்டியான மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 40 ரன்கள்ளும் , டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 28 ரன்கள்ளும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 6.4 ஓவர்களில் 52 ரன்கள் சேர்த்தனர். பின்னர், நிதீஷ் ரெட்டி (19), மற்றும் ஹென்ரிக் க்ளாசன் 37 எடுத்து 166 ரன்கள் எடுக்க உதவினார் . பிட்ச்ன் தன்மை சிறிது மெதுவாக இருந்த காரணத்தினால் 162 என்ற ரன்கள் போதுமானதாக கருதப்பட்டது .
166 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரெக்கெல்ட்டன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 26(16) எடுத்து வெளியேறினார் . பின்னர் ரெக்கெல்ட்டன்ஜோடி சேர்ந்த ஜாக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார் . ஜாக்ஸ் 36. ரெக்கெல்ட்டன் 31 , சூரியகுமார் 26 ரன்கள் எடுத்தனர் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 வர்களில் 167 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதே மைதானத்தில் வருகின்ற 20ஆம் தேதி சென்னை அணியை எதிகொள்கிறது மும்பை இந்தியன்ஸ் ஆணி .