கோய்ம்பத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லுாரி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் மீடியா துறையை சேர்ந்தவர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது . இந்தாண்டுக்கான போட்டிகள் நேற்று முன்தினம்(15-07-23) அன்று துவங்கியது.
இப்போட்டியில் மீடியா துறையை சார்ந்த எட்டு அணிகளும், இரண்டு கிருஷ்ணா கல்லுாரி ஊழியர்கள் அணிகளும் பங்கேற்று லீக் மற்றும் நாக் அவுட் முறையில் மோதுகின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தி இந்து அணியையும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தி டைம்ஸ் ஆப் இந்தியா அணியையும் வீழ்த்தின.
நேற்று காலை நடந்த முதல் போட்டியில் தினமலர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தினகரன் அணியை வீழ்த்தியது. நேற்று மதியம் நடந்த இரண்டாவது போட்டியில் மீடியா 11 அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சூரியன் எப்.எம்., அணியை வீழ்த்தியது.
இந்த போட்டிகள் அனைத்தும் கோவைப்புதுார் கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் சனி மற்றும் ஞாயற்றுகிழமைகளில் நடைபெற்று வருகிறது.